Tuesday, August 19, 2014

Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan

Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan
Sung By Haricharan, Bele Shende
Music By A.R.Rahman
Lyrics By Vaali

vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam

vandhanam vandhanam
vandhanam vandhanam
ellorukkum thanthanam thanthanam

kunthanum kunthanum
kunthanum kunthanum
idam pidikka munthanum munthanum

yaadhavanaam andha madhavanum
avan machunanam andha archuunanum
yaathirai varugayile
theertha yaarthirai varugaiyile

naadu kadanthu kaadu kadanthu
maduraikku vaaraaga
then maduraikku vaaraaga

angu nadapathu alli raajiyam
athanai aangalum sutha poojiyam
alliyo puthu rosa
paarthaan arjuna maha raasa

alli malarula kallu vadiyuthu
arjunan mugathula jollu vadiyuthu
aarambamaaguthu
naadaga kaadhalu
aanukkum pennukkum
nadakkura modhalu


alli varugiraal
alli varugiraal
azhagi aval perazhagi
alli varugiraal
alli varugiraal
azhagi aval perazhagi

mugathazhagi
aamam mugathazhagi
maruthani poosiya nagathazhagi
kovil thoon pola thodai azhagi
komberiri mookkan pola seda azhagi
ava nadakura nadaiya paarthu

thendral kaathu
atha paarthu
udal verthu
udan thorthu
alli varugiraale

alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi

alli varugiraal alli varugiraal
azhagi aval perazhagi

f:priya sakhiye priya sakhiye
mazhai naalaa ithu
mazhai naalaa?
mayilinam thogai virippathenna
adhu mogana naadagam nadipathenna?
mogana naadagam nadipathenna?

priya sakhiye priya sakhiye
mazhai naala idhu mazhai naalaa?
mayilinam thogai viripathenna?
adhu mogana naadagam nadipathenna?

chorus: nalla sagunam
idhu nalla sagunam
oru naayaga varakoodum
unga vaai velukka
iru vizhi sivaka
kaadhal noi thanai thara koodum

f:yaaradi avan yaaradi
veeradhi veerann-u koradi
sooradhi soorann-u koorudi
indha alliyai
jaathi malliyai
inba valliyai
uyir kolliyai
vellathaan vanthavana
aye vannam migunthavanaa?
yaaradi yaaradi

m:avaiyil irukkum athanai perukkum
vanakkam
vanakkam
vanakkam

en vanakathile thaan tamizh manakkum
panja paandavar anju pergale
naduvilil naan piranthan
arjunan enbathu en peru
athinapurithaan en ooru

kanna kanna

yen azhaithaai
ennai yen azhaithaai
archunane en aaruyir thozha

madurai aalgira alli
en manathai eduthaale kalli
en ullathai ottiya palli
avala odukkanum padukayil pulli

indha samayathil uthavanum kanna
engala sethu nee vaikkanum onna

naan baamavukku thaanda maama
adhai nee marakadhey aama

unnai vittal ennaku yaaru
udhavi seivaar kooru

naan maargangal solven kelu
mana maalaiyai thaangum un tholu

f: naan annathuyil endrirukka
en manikazuthil thaali kattalama
kattalama

m: en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla
en mela kutham illa
unna kandamuthala en nenju suthamilla

f: nee potathu ethanai vedamada
kundhi puthiranaai vantha moodanada
veeran endraal nee villedu
indha poovaiyin mele nee porthodu

nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye
naam thaayaal piranthom
pirandhom
thamizhaal valarndhom
valarndhom

thaayum tamizhum penthaaney
irandum irandu kanthaaney
thaayum tamizhum penthaney
irandum irandu kanthaaney

parangiyarkku bharatha-thaai thaan adimai yaavadha?
aval kaivilangalum kaal vilangaalum naalum novadha?
viduthalai velviyil pozhuthalai
pillaiyum seivano suduvathai
makkalukku illai soodu

idhu maaberum maana kedu
enge pogum naadu
idhu yaam irukkum thaai veedu

nenju porukkuthillaiye
nenju porukkuthillaiye


Lyrics Of Alli Arjuna From Kaaviya Thalaivan in Tamil Font

கட்டியக்காரன்

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்
தந்தனம் தந்தனம் 
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம் எல்லோருக்கும்
தந்தனம் தந்தனம்
குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும் – இடம் பிடிக்க
முந்தனும் முந்தனும்

2

யாதவனாம் அந்த மாதவனும் – அவன்
மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்….
யாத்திரை வருகையிலே – தீர்த்த
யாத்திரை வருகையிலே…..
நாடுகடந்து காடுகடந்து
மதுரைக்கு வாறாக – தென்
மதுரைக்கு வாறாக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்!
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்!
அல்லியோ புது ரோசா! – பார்த்தான்
அர்ச்சுன மகராசா !

அல்லி மலருலே கள்ளு வடியுது!
அர்ச்சுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடகக் காதலு !
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கிற மோதலு !

3

அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
முகத்தழகி! ஆமாம் முகத்தழகி !
மருதாணி பூசிய நகத்தழகி !
கோயில் தூண் போலத் தொடையழகி !
கொம்பேறி மூக்கன் போல சடையழகி !
அவ நடக்குற நடையப் பாத்து –
தென்றல் காத்து அத பாத்து
உடல் வேத்து – ஓடும் தோத்து !

அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் ! அல்லி வருகிறாள் !
அழகி அவள் பேரழகி

அல்லி பாடுதல் :
ப்ரிய சகியே ! ப்ரிய சகியே !
மழைநாளா ? இது மழைநாளா ?
மயிலினம் தோகை விரிப்பதென்ன? – அது
மோகன நாடகம் நடிப்பதென்ன ?
மோகன நாடகம் நடிப்பதென்ன ?

ப்ரிய சகியே ! ப்ரிய சகியே !
மழைநாளா ? இது மழைநாளா ?
மயிலினம் தோகை விரிப்பதென்ன? – அது
மோகன நாடகம் நடிப்பதென்ன ?
மோகன நாடகம் நடிப்பதென்ன ?

தோழி:
நல்ல சகுனம் ! இது நல்ல சகுனம் !- ஒரு
நாயகன் வரக்கூடும் ! – உங்கள்
வாய் வெளுக்க, இரு விழி சிவக்க – காதல்
நோய்தனைத் தரக்கூடும் !
அல்லி:
யாரடி ? அவன் யாரடி ?
வீராதி வீரனோ ? கூறடி !
சூராதி சூரனோ ? கூறடி !– இந்த
அல்லியை ! ஜாதி மல்லியை !- இன்ப
வல்லியை ! உயிர்க்கொல்லியை….
வெல்லத்தகுந்தவனோ ? எழில் –
வண்ணம் மிகுந்தவனோ ?
யாரடி ? அவன் யாரடி ?

4

அர்ச்சுனன் :
அவையிலிருக்கும் அத்தனை பேருக்கும்
வணக்கம்! வணக்கம்! வணக்கம்! என்
வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும் !

பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களில்
நடுவினில் நான் பிறந்தேன் ! அம்பு
விடுவதில் நான் சிறந்தேன் !
அண்ணனிரண்டு பேர் ! தம்பி இரண்டு பேர்!
அர்ச்சுனன் என்பது என்பேரு!
அத்தினபுரிதான் என் ஊரு !

5

(கண்ணன் பாடியவாரே வரல்! )
ஏனழைத்தாய் ?- என்னை ஏனழைத்தாய் ?
அர்ச்சுனனே ! என் ஆருயிர்த்தோழா ! –

(அர்ச்சுனன் பாடுதல்)
மதுரையை ஆள்கிற அல்லி ! என்
மனதை எடுத்தாளே கல்லி ! - என்
உள்ளத்தை ஒட்டிய பல்லி ! – அவளை
ஒடுக்கனும் படுக்கையில் புல்லி !
இந்த சமயத்தில் உதவனும் கண்ணா !
எங்களை சேர்த்து நீ வைக்கனும் ஒண்ணா?

(கண்ணன் பாடுதல்)
நான் பாமாவுக்குத் தாண்டா மாமா!
அதை நீ மறக்காதே ஆமா!

அர்ச்சுனன் :
உன்னை விட்டால் யாரு –
உதவி செய்வார் ? கூறு !

நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு- மன
மாலையைத் தாங்கும் உன் தோளு !
6
அல்லி கோபமாய் அர்ச்சுனனை சாடுகிறாள்

அல்லி :
நான் அன்னத்தூவியில்
அயர்ந்திருக்க –என்
மணிக்கழுத்தில்…தாலிகட்டலாமா? – கட்டலாமா?

அர்ச்சுனன் :
என் மேலே குத்தமில்லே ! உனைக் கண்டது
முதலாய்
என் நெஞ்சு சுத்தமில்லே !
என் மேலே குத்தமில்லே ! உனைக் கண்டது முதலாய்
என் நெஞ்சு சுத்தமில்லே !
அல்லி :
நீ போட்டது எத்தனை வேடமடா ! குந்தி
புத்திரனாய் வந்த மூடமடா !
வீரனென்றால் – நீ வில்லெடு ! இந்தப்
பூவையின் மேலே போர்தொடு !

7
Marriage music

8

(அர்ச்சுனன் பாடுகிறான்)
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நாம் தாயால் பிறந்தோம் ! - பிறந்தோம் !
தமிழால் வளர்ந்தோம் ! - வளர்ந்தோம் !
தாயும் தமிழும் பெண் தானே !
இரண்டும் இரண்டு கண் தானே !
தாயும் தமிழும் பெண் தானே !
இரண்டும் இரண்டு கண் தானே !
பறங்கியருக்கு பாரததாய் தான் அடிமை ஆவதா !- அவள்
கை விலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா ?
விடுதலை வேள்வியில் கொடு தலை !
வெள்ளையன் செய்வானோ சுடுதலை ?
மக்களுக்கில்லை சூடு ! - இது
மாபெரும் மானக் கேடு !
எங்கே போகும் நாடு ? – இது
யாமிருக்கும் தாய் வீடு !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !
நெஞ்சு பொறுக்கு தில்லையே !

No comments:

Post a Comment